சங்க காலத்தில் அதாவது தோராயமாக கிமு 2ஆம்நூற்றாண்டு துவங்கி கிபி 2ஆம் நூற்றாண்டு வரையான காலத்தில் பாணர்கள்,பறையர்கள்,துடியர்கள்,கடம்பர்கள்,கூத்தர்கள்,பொருநர்கள் இவர்கள் அனைவரும் இசைத்தொழிலையும் நாட்டியத்தொழிலையும்(கூத்து) செய்துவந்தவர்கள்.இதற்கான ஆதாரங்கள் சங்க இலக்கியத்தில் உள்ளன.ஆற்றுப்படை நூல்களில் இவர்களின் வறுமை நிலையும் அவர்களைப்போற்றிக்காத்த வன்னியர்களின் (குறுநில மன்னர்கள்,வேளிர்கள்,மூவேந்தர்கள்) இரக்கக்குணமும் வள்ளல்தன்மையும் புலப்படுகின்றன.இசையும் கூத்தும் நாடகமும் இவர்களால் வளர்க்கப்பட்டன.ஔவை கூறினாள், ''நறந்த நாறும் தன்கையால் புலவுநாறும் என்தலை தைவருமன்னே'' என்று அதியமான் புலால் நாற்றம் வீசும் ஔவையின் தலையைத்தேன் மணக்கும் தன் கையால் கோதினான் என்று பாடுகிறாள்.புலவர்களில் கற்றோர்களின் புலமை மரபும் நாடோடிப்பாணர்களின் புலமைமரபும் இணைந்திருந்தன.எனினும் கபிலரின் ''வரிசை அறிதலோ அரிதே ஈதல் எளிதே மாவன்தோன்றல்'' என்ற குரல்மூலம் அவர் மரபுப்புலமைக்கு நல்ல பரிசை வேண்டுகிறார் என்பதைப் புலப்படுத்துகிறார். கூட்டங்கூட்டமாக பாணர்,பறையர்,துடியர்,...