திருக்கைவளம்-வன்னியர் வரலாறு

வன்னிய அரசர்கள் புகழ்பாடும் #திருக்கைவளம்

இந்நூல் இருவாட்சிப் புலவர் என்பவரால், அரியலூர் சமஸ்த்தானத்தை ஆட்சி செய்த, சேரமன்னர்களின் வம்சாவளியான வன்னிய மழவராய மன்னர்களைப் புகழ்ந்து பாடப்பட்டது.

இதில் பெரும்பாலும் மழவராய மன்னர்களின் கொடை மற்றும் வெற்றி சிறப்பு பற்றி பாடப்பட்டிருந்தாலும் மற்ற வன்னிய அரசர்களின் கொடைத் தன்மையையும் புகழ்ந்துரைக்கிறது.

இந்நூல் பாடப்பட்ட காலம் சுமார் 250 ஆண்டுகளுக்கு (கி.பி 1724-1737) முன்னராகும்.

அப்போது அரியலூர் சமஸ்த்தானத்தை #விஜயரங்க_ஒப்பிலாத_மழவராயர் என்ற வன்னிய அரசர் ஆட்சி செய்தார்.

இந்நூலில் புகழ்ந்து பாடப்பட்டுள்ள வன்னிய மன்னர்கள் மற்றும் பாளையக்காரர்கள்

1.அரியலூர் மழவராயர்

2.மயிலாடுதுறை அஞ்சாத சிங்கம்

3.திருவிடைச்சுரம் மன்னர்கள் காந்தவராயன் சேந்தவராயன்

4.பாண்டிய வம்சாவளி அழகாபுரி இரட்டை குடையரசர்கள்.

5.பல்லவ மன்னன் கருணாகர தொண்டைமான்

6.வடகால் அரசர்களான ராயராவுத்தமின்டர்கள்

7.பிச்சாவரம் சோழ அரசர்கள்

8.சிவகிரி பாண்டியர்கள்

9. உடையார்பாளயம் பல்லவ அரசர்கள்

10. போசாள மன்னன் வீரவள்ளாளன்

ஆகியோரின் கொடைத்திறனைப் புகழ்ந்து பாடப்பட்டுள்ளது.

இந்நூலை இயற்றிய இருவாட்சிப் புலவருக்கு ஏராளமான பொன் பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

1700 களிலேயே பாடப்பட்ட இந்நூலில் மூவேந்தர் மற்றும் பல்லவ வம்சாவளியில் வந்த பிச்சாவரம் சோழர்கள், அரியலூர் சேரர்கள், சிவகிரி பாண்டியர்கள், உடையார்பாளயம் பல்லவர்கள் ஆகிய வன்னிய பாளையக்காரர்கள் அனைவரின் கொ
டைத்திறனும் பாடப்பட்டிருப்பது மேலும் சிறப்பாகும்.

இன்று வெட்டி கௌரவத்திற்க்காகவும், அரச பெருமைக்காகவும் பல்வேறு சாதியினர் தங்களை மூவேந்தர் வம்சத்தினராக அடையாளப்படுத்த துடிக்கின்றனர்.

ஆனால் 250 ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றிய இந்நூல் மூவேந்தர் பல்லவர்கள் வன்னிய வம்சத்தினர் என்பதை உலகிற்கு எடுத்துரைக்கிறது.

எல்லாவற்றிற்க்கும் மேலாக சிவகிரி வன்னிய சமஸ்த்தானத்தை மறவர் பாளையமாக அடையாளப்படுத்த துடிக்கும் ஈனப்பிறவிகளுக்கு செறுப்படியாக இந்த #திருக்கைவளம் அமைந்துள்ளது.

மேலும் ஒரு சுவாரசியமாக இந்நூலை முதன்முதலாக பதிப்பித்தவர் பன்னீராயிரம் பண்ணையை ஆண்டுவந்த அக்னி வம்ச க்ஷத்ரியர்களான வன்னிய மகாராஜா தசவீரபூபதி அவர்களால் 1873 அச்சிடப்பட்டு வெளியாகியுள்ளது.

இந்த அரிய நூலை வெளிக்கொண்டு வந்தவர் எங்கள் வன்னியவம்சத்தின் பிதாமகர் திரு. முரளிநாயகர் அவர்களுக்கு மிக்க நன்றி!!!

#சோழநாட்டு_சத்ரியன்
நன்றி:- முரளிநாயக்கர்,சோழநாட்டுச்சத்திரியன்.

Comments

Popular posts from this blog

சங்க காலத்தில் பறையர்களின் முதல் தொழில் எது?

சம்புவராயர் வரலாற்று நூல்-புலவர் கோவிந்தனாரின் மகனார் எழுதியது.