சேலம் அர்த்தநாரீச வர்மா! "மறைக்கப்பட போராளி, சேலம் அர்த்தநாரீச வர்மா: 143 ஆவது பிறந்த நாள் இன்று!" -------------------------- சுதந்திர போராட்ட வீரர், கவிச்சிங்கம் சேலம் அர்த்தநாரீச வர்மா: # தமிழ் இனத்துக்காகவும் இந்திய விடுதலைக்காகவும் சமுதாய முன்னேற்றத்துக்காகவும் அயராது உழைத்தவர். # வாழ்க்கை முழுவதும் ஒரு போராளியாக, கவிஞராக, பத்திரிகையாளராக சமூகத்தொண்டினையே உயிர்மூச்சாகக் கொண்டிருந்த மாபெரும் தியாகி. # சேலம் மாநகர் சுகவனபுரியில் சுகவன கண்டர் - இலட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மகனாக 27.7.1874-ல் பிறந்தவர் # இந்திய சுதந்திர போராட்டத்தில் திலகரை பின்பற்றி தீவிரவாத பாதையை ஏற்று 'கழறிற்றறிவார் சபை' எனும் அமைப்பை 1907 ஆம் ஆண்டில் தோற்றுவித்தவர். # மகாதமா காந்தியை பின்பற்றி தனது வாழ்நாள் முழுவதும் கதராடை அணிவதையே கொள்கையாகக் கொண்டு வாழ்ந்தவர். # மது விலக்கிற்காக அயராது போராடியவர். தனது பள்ளித்தோழரான ராஜாஜியை வற்புறுத்தி இந்தியாவிலேயே முதன்முதலாக 1937ல் சேலம் ஜில்லாவில் மது விலக்கு கொள்கையை செயலாக்கியவர். # மூதறிஞர் ராஜாஜியால கவிச்சிங்கம் எனப் பட்டம் சூட்டப்பட்டவர். திரு....