மறைக்கப்பட்ட ஆளுமை

சேலம் அர்த்தநாரீச வர்மா!

"மறைக்கப்பட போராளி, சேலம் அர்த்தநாரீச வர்மா: 143 ஆவது பிறந்த நாள் இன்று!"


--------------------------

சுதந்திர போராட்ட வீரர், கவிச்சிங்கம் சேலம் அர்த்தநாரீச வர்மா:


# தமிழ் இனத்துக்காகவும் இந்திய விடுதலைக்காகவும் சமுதாய முன்னேற்றத்துக்காகவும் அயராது உழைத்தவர்.


# வாழ்க்கை முழுவதும் ஒரு போராளியாக, கவிஞராக, பத்திரிகையாளராக சமூகத்தொண்டினையே உயிர்மூச்சாகக் கொண்டிருந்த மாபெரும் தியாகி.


# சேலம் மாநகர் சுகவனபுரியில் சுகவன கண்டர் - இலட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மகனாக 27.7.1874-ல் பிறந்தவர் 


# இந்திய சுதந்திர போராட்டத்தில் திலகரை பின்பற்றி  தீவிரவாத பாதையை ஏற்று 'கழறிற்றறிவார் சபை' எனும் அமைப்பை 1907 ஆம் ஆண்டில் தோற்றுவித்தவர்.


# மகாதமா காந்தியை பின்பற்றி தனது வாழ்நாள் முழுவதும் கதராடை அணிவதையே கொள்கையாகக் கொண்டு வாழ்ந்தவர்.


# மது விலக்கிற்காக அயராது போராடியவர். தனது பள்ளித்தோழரான ராஜாஜியை வற்புறுத்தி இந்தியாவிலேயே முதன்முதலாக 1937ல் சேலம் ஜில்லாவில் மது விலக்கு கொள்கையை செயலாக்கியவர்.


# மூதறிஞர் ராஜாஜியால கவிச்சிங்கம் எனப் பட்டம் சூட்டப்பட்டவர். திரு.வி. கல்யாணசுந்தரனாரால் 'மகாகவி பாரதியாருக்கு இணையான தேசப்பக்தி கவிஞர்' எனப் புகழப்பட்டவர்.


# மகாகவி பாரதியார் இறந்தபோது, ஆங்கிலேயருக்கு அஞ்சி அவரைப்பற்றி பேச எல்லோரும் பயந்த நிலையில், மகாகவி பாரதிக்காக இரங்கல் கவிதை எழுதி சுதேசமித்தரனில் வெளியிட்ட ஒரே வீரர்.


# இந்திய விடுதலைக்காக 1931 ஆம் ஆண்டில் வீரபாரதி எனும் பத்திரிகையை நடத்தியவர். அக்காலத்தில் தமிழில் வெளியான ஒரே சுதந்திரப் போராட்ட பத்திரிகை அது மட்டும்தான். ஆங்கிலேயர்கள் சிறப்பு சட்டம் மூலம் தடைசெய்த ஒரே தமிழ் பத்திரிகையும் அதுவே.


# மகாத்மா காந்தி 1934 இல் திருவண்ணாமலைக்கு வந்தபோது வரவேற்பு பத்திரம் வாசித்து வெளியிட்டவர். கல்விக்காகவும் பெண் கல்விக்காவும் பாடுபட்டவர்.


# 1934 இல் வன்னியர்களை குற்றப்பரம்பரையினர் என்று நீதிக்கட்சியின் அறிவித்த போது, அதற்கு எதிராக போராடி அச்சட்டத்தை வாபஸ் வாங்கச் செயதவர்களில் ஒருவர்


# தமிழ்நாட்டின் திருப்பதி, சித்தூர் பகுதிகளை ஆந்திராவுடன் இணைப்பதை எதிர்த்துப் போராடியவர்.


# சத்திரியன், சத்திரிய சிகாமணி, வீரபாரதி, தமிழ் மன்னன்  எனப் பல பத்திரிகைகளை நடத்தியவர். மதுவிலக்கு சிந்து உள்ளிட்ட  பல நூல்களையும் எழுதி வெளியிட்டவர். 


# அர்த்தநாரீச வர்மா 7.12.1964-ல் திருவண்ணாமலையில் உயிர்நீத்தார். மறைவுக்கு மூதறிஞர் ராஜாஜி கல்கி இதழில் புகழஞ்சலி கட்டுரை எழுதினார்.


# மறைக்கப்பட போராளி, சுதந்திர போராட்ட வீரர், கவிச்சிங்கம் சேலம் அர்த்தநாரீச வர்மா அவர்களின் தியாகம் போற்றப்பட வேண்டும்.


--------------------------

கவிச்சிங்கம் சேலம் அர்த்தநாரீச வர்மா அவர்களின் நூல்வெளியீட்டு விழாவினை 27.2.2017 அன்று மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் சேலத்தில் நடத்தினார்கள். 


அர்த்தநாரீச வர்மா மணிமண்டபம், திருவுருவச்சிலை அமைத்திட வேண்டும், சேலம் விமானநிலையத்துக்கு அர்த்தநாரீச வர்மா பெயரை  சூட்ட வேண்டும், அர்த்தநாரீச வர்மா அஞ்சல் தலை வெளியிட வேண்டும், கவிஞர்களுக்கு அர்த்தநாரீச வர்மா விருது அறிவிக்க வேண்டும் - என மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Comments

Popular posts from this blog

சங்க காலத்தில் பறையர்களின் முதல் தொழில் எது?

திருக்கைவளம்-வன்னியர் வரலாறு

சம்புவராயர் வரலாற்று நூல்-புலவர் கோவிந்தனாரின் மகனார் எழுதியது.